Tuesday, 13 August 2013

THALIVA- Movie Status in Bangalore

              தமிழகத்தில்தான் தலைவா படத்துக்கு தடை. ஆனால் பெங்களூரில் படம் பிய்த்துக் கொண்டு போகிறதாம். தமிழக ரசிகர்களும் பெருமளவில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கிறார்களாம். பெங்களூர் பாக்ஸ் ஆபீஸில் படம் ஹிட்டாகி விட்டதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல கூட்டம் வருவதால் பிற படங்களை தூக்கி விட்டு தலைவா படத்தைப் போட்டு வருகிறார்களாம் தியேட்டர் உரிமையாளர்கள். தலைவா படத்தை தமிழர்கள் மட்டுமல்லாமல் கன்னடர்களும் கூட வந்து பார்க்கிறார்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

கடும் போட்டியை மீறி தற்போது பெங்களூர் தியேட்டர்களில் கன்னடம் உள்ளிட்ட சில வேறு மொழிப்படங்களும் புதிதாக திரையிடப்பட்டுள்ளன. ஆனால் தலைவா படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

26 திரைகளில் தலைவா படம் பெங்களூரில் மட்டும் 26 திரைகளில் திரையிடப்பட்டுள்ளதாம். தமிழகத்தில் இருந்து ரசிகர்கள் பட்டாளம் பெங்களூருக்கு படையெடுத்துள்ளது.

டோனி என்ற கன்னடப் படமும் தற்போது பெங்களூரில் ரிலீஸாகி ஓடி வருகிறது. அந்தப் படம், தலைவா, சென்னை எக்ஸ்பிரஸ் ஆகியவற்றுக்குத்தான் தற்போது கடும் போட்டி நிலவுகிறதாம்.

தலைவா படத்திற்கு பெங்களூரில் நல்ல பிசினஸ் என்று சொல்கிறார்கள். திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்

படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து தலைவாவை திரையிடாத தியேட்டர்களும் கூட தற்போது தலைவாவுக்கு மாறத் தொடங்கியுள்ளனவாம்

தலைவா படம் குறித்த விமர்சனங்களால் வசூலில் பாதிப்பில்லை என்றும் சொல்கிறார்கள். முதல் வார இறுதியில்வசூல் சிறப்பாகவே இருந்ததாக சொல்கிறது கன்னட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க வட்டாரம்.

Thanks To

THAT'S TAMIL(one India)




No comments:

Post a Comment