Friday, 30 August 2013

ABCDE ENGINEERING COLLEGE

இப்படி தான்  எங்க கிட்டேயும் சொன்னங்க .............

ஒரு நாள்  முழுவதும் ஸ்பீச் குடுத்தாங்க .....

BUT  AS USUAL..ENGINEERING COLLEGE னு proof  பண்ணிட்டிங்க .......

WATCH VIDEOS ........

http://www.youtube.com/watch?v=vA9MTiv8jWI

Wednesday, 21 August 2013

ILAYA THALAPTHI








அச்சங்கள்  உனை கண்டு அச்சப்பட ..
உச்சத்தை  தொட வேண்டும் முன்னேறு  நீ .......

பத்தோடு பதினொன்று நீ இல்லையே .,
பெயர்  சொல்லும்  ஒரு தலைவன்  நீ தான்  இனி ............


தலைவா .................







Friday, 16 August 2013

ஆதலால் காதல் செய்வீர்

"" நான்  இன்னும் இந்த படம் பாக்கல... இன்னும் என் தளபதி படம் வரல ...அந்த படம் வந்த தான் மத்த படம் பாக்கணும் .... ""

நம்ம அண்ணன் ஜாக்கி எழுதிய திரைவிமர்சனம் 

Aadhalal Kadhal Seiveer-2013 /உலகசினிமா/இந்தியா/ஆதலால் காதல் செய்வீர். சினிமா விமர்சனம்.




1989 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வந்தது..


அது வழக்காமான தமிழ்சினிமா போல ஜிகினா கலக்காமல் உண்மை பேசியது... விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வினை அப்பட்டாமாக  பதிவு செய்தது.... எதைபற்றியும் கவலைபடாமல்  செவிட்டில் அறைந்து உண்மை பேசியது.... அந்த படத்தில் வந்த டயலாக் பற்றி ஊரே பரபரப்பாய்  பேசியது..  அது உண்மையை பேசிய காரணத்தாலே ஒரு சிலர் அந்த படத்தை பார்த்து  முகம் சுளித்தார்கள்... செம லோக்கலாக ஒரு படத்தை எடுத்து இருக்கின்றார்கள் என்று சொல்லி விட்டு பான்ட்ஸ் பவுடரை முகத்தில்   அப்பிக்கொண்டார்கள்.... அந்த படத்தின் பெயர் புதிய பாதை... அதை நடித்து எழுதி இயக்கியவர் பார்த்திபன்...

நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள்ன்னு   ரேடியோவிலும் டிவியிலும் கத்தறாங்களேஅதை வாங்கி பலூனாக்கி பறக்க விடறதுக்கா -என்னை மாதிரி  அனாதைங்க உருவாகிவிடக்கூடாதுன்னுதான் என்று நாயகன் வசனம் பேசுவார்... 

அதை கேட்டு முகம்சுளிதாலும் அதில் உள்ள நியாயத்தை நம்பில்  பலர் புரிந்து கொள்ளாமல் நல்லவன் வேஷம் போட்டார்கள்..என்பதே அன்றைக்கு நான் கண்ட... உண்மை...

 புதியபாதை வந்து சரியாக 24 வருடங்கள் கழித்து செவிட்டிலும் நெற்றி பொட்டிலும் ஓங்கி ஒன்றரை டன் வெயிட் அடி கொடுத்து ,ஒரு படம்   வந்து இருக்கின்றது...இந்த 2013 ஆண்டு சுதந்திரதினத்தில் இருந்து  அந்த படம் வெளியாகி இருக்கின்றது.. அந்த படத்துக்கு பேர் ஆதலால் காதல்  செய்வீர்... இயக்கம் சுசீந்திரன்.. அவசியம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்....டோன்ட் மிஸ் இட்.

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை  போன்ற படங்களில் தன் முத்திரையை பதித்த இயக்குனர் சுசிந்திரன் இந்த படத்தில் மிரட்டி இருக்கின்றார்...

 ஜாக்கி சார்...

 என்னப்பா?-

 அவரு ராஜபாட்டைன்னு ஒரு படம் பண்ணி இருக்கின்றார்....

தம்பி நல்ல  விஷயத்தை பத்தி பேசும் போது, திருஷ்ட்டி பத்தி எல்லாம் பேசனுமா? தெரியாமதான் கேக்குறேன்...  அந்த படத்தை பத்தி  நான் பேசித்தான்  ஆகனுமா?

இல்லைன்னே...

அப்ப அப்படியே போயிடு..

செல்போன் வந்தஉடன் தகவல் எத்தளவுக்கு மிக வேகமாக பரவுகின்றதோ? அதே வேகத்தோடு காதலும் காம்மும் பின்னி பினைந்து வேகமாக பரவுகின்றன... என்பதைதான் இப்போது  நம் கண்ணால் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்...20 வருடத்துக்கு முன் காதலியின் வீட்டில் அப்பா , அம்மா இருக்காங்களா?  ஆட்டு குட்டி இருக்கின்றதா என்பது எல்லாம் தெரியாது... ஆனால் இப்போது   காதலி ஆய் போய் விட்டு கால் கழுவி விட்டு வருவதுவரை செய்திகள் உடனுக்குடன்  நொடிக்கு நொடி பகிர்ந்துகொள்ளுகின்றார்கள்... அப்படி பகிர்வதுகாரணமாக  எல்லாம் சலித்து அடுத்து உடல்வேட்கையை குறி வைத்து  தினவை  தீர்த்துக்கொள்ளுகின்றார்கள்... புத்திசாலிகள் பிழைத்துக்கொள்ளுகின்றார்கள்... சிலர் மாட்டிக்கொள்ளுகின்றார்கள்... மாட்டிக்கொண்டவர்களின் கதை இது.


சமுகத்தை  பிரதிபலிக்கும் திரைப்படங்கள்தான் என்னை பொறுத்தவரை  நல்ல  திரைப்படங்கள் என்பேன்.... அந்த வகையில் உலகசினிமா தரத்துக்கு ஒரு திரைப்படமாக இந்த திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கின்றது.

  சரி வழக்கம் போல பிரிச்சி மேஞ்சிடுவோமா?

==================


Aadhalal Kadhal Seiveer-2013 /உலகசினிமா/இந்தியா/ஆதலால் காதல் செய்வீர் படத்தின்  ஒன்லைன்...

புரிதலற்ற விடலை காதலில் பாதிக்கப்படுபவன் யார்? என்பதுதான் படத்தின் ஒன்லைன்

=====================
Aadhalal Kadhal Seiveer-2013 /உலகசினிமா/இந்தியா/ஆதலால் காதல் செய்வீர் படத்தின் கதை என்ன?


கார்த்திக் கல்லூரியில் படிக்கும் டீன் ஏஜ் பையன்...அதே கல்லூரியில் படிக்கும் அவள் தோழி சுவேதாவை லவ்வுகின்றான்.. அவளும் ஒரு கட்டத்தில் லவ்வுகின்றாள். இரண்டு பேரும் லவ்வி .. அவளுக்கு நாள் தள்ளி போகின்றது.... பிரக்லர் கார்ட் இரண்டு கோடுடன் இன்டர்வல்பிளாக்... படிக்கற இரண்டு பசங்களுக்கு இந்த மாதிரி நடந்து போச்சின்னா என்னவாகும்  மீதி படத்தை உங்க வீட்டுல இருக்க டீன்ஏஜ் பசங்களோட போய் இந்த படத்தை பாருங்க.

===========================
காதலின் அபத்ங்களையும்  காதலில்  உள்ள கரன்ட் டிரென்ட் செட்டர் எல்லாத்தையும் செல்லுலாய்டில் ஒரு ஆவனமாக பதியவைத்து  இருக்கின்றார்...இயக்குனர் சுசீந்திரன்.


அம்மாவுக்கு டவுட்  வந்துடுச்சி என்று  ஆட்டோவில் போகும் போது காதலன் போன் அடிக்கும் போது எடுத்து பேசாமல் அமைதி காக்கும் அந்த திருட்டுதனம்.. வீட்டில் காதலனோடு இருக்கும் போது , அம்மாவின் தோழி கடன் கேட்க வீடு  தேடி வரும் போது தப்பிக்கும் அந்த காட்சி  என இளசுகளின்  எல்வலா திருட்டு தனத்தையும் பதிவு செய்து இருக்கின்றார்.

படத்தில் டயலாக் எல்லாம் அற்புதம்... முக்கியமாக காதலில் உதவும் மாணவதலைவனாக வரும் அந்த  தாடி வாலா அடித்து விடும் டயலாக் காட்சிகள் அனைத்தும் அருமை...
உதாரணத்துக்கு காதலிக்கும் போது  உனக்கு எல்லாரும்  முட்டாளா தெரிவாங்க.. ஆனா நீ காதலில்  தோக்கும் போது, நீ மட்டும்தான் முட்டாளா உட்கார்ந்துகிட்டு இருப்பே.. போன்ற டயலாக்குகள் அசத்தல்.

ஒளிப்பதிவு எல்லாம்  கண்களில்  ஒற்றிக்கொள்ள வேண்டும் போல இருக்கின்றது... படத்துக்கு எனக்கு தெரிந்து அதிக  செலவில்லை... லயோலா காலேஜ்,  பெசன்ட்நகர்,ஈசிஆர் ரோட், நாயகன்,  நாயகி வீடு, சில ரெஸ்ட்டாரன்ட்கள் விக்டோரியா ஹாஸ்டல் அவ்வளவுதான்....


உண்மையை மிக அருகில் உட்கார்ந்து மிக அழகாக பதிவு  செய்து இருக்கின்றார்  இயக்குனர்..

இந்த படத்தில்  எல்லோருடைய நடிப்பையும்  தூக்கி சாப்பிட்டு விட்டார்.... நாயகியின் அம்மா கேரக்டர்... என்ன  உடல் மொழி, என்ன நடிப்பு, சான்சே இல்லை... ஜெயப்பிரகாஷையே தூக்கி சாப்பிட்டு விட்டார்... முக்கியமாக வாந்தி எடுத்ததில் இருந்து ஜெயப்பிரகாஷ் வீட்டுக்கு வந்து அழும் காட்சி வரை அவரின் நடிப்பு  அற்புதம்.

யுவன் பாடல்கள் அருமை....

சறுக்கல் என்றால்.... நாயகி பாத்திரம் போல்டாக அவன் வேண்டாம் என்று பாலகுமாரன் கதைநாயகிகள் போல  முடிவெடுத்து விட்டு மனக்கோலத்தில் அமர்வது நெருடல்.. குழந்தை இறந்தே பிறந்து விட்டது என்று பெற்றோர் மறைத்து  இருக்கலாம்...

கடைசியில் அந்த பிள்ளை  பாலோடு  மணலில் நடக்க  வெறும் காலில் நடந்தகாரணத்தால் சுடு  தாங்காமல் உட்கார்ந்து அழும் அந்த அழுகை படம் முடிந்து நம்மை  சூடுகின்றது.

=============
படத்தின் டிரைலர்.




==========
படக்குழுவினர் விபரம்.


Directed by Suseenthiran
Produced by Saravanan
Screenplay by Suseenthiran
Starring Santosh Ramesh
Manisha Yadav
Poornima Jayaram
Music by Yuvan Shankar Raja
Cinematography Soorya.A.R
Editing by Anthony
Studio Nallu Studios
Distributed by Red Giant Movies
Release date(s) August 15, 2013
Country India
Language Tamil

==================
பைனல்கிக்.

 இந்த படம் பார்த்தே தீரவேண்டிய படம்... இன்னும் பதினைந்து வருடம் கழிந்து காதல் பற்றி அபிப்பராயம் போன்றவைகளில் பெரியமாறுதல் வரும்...கற்பு என்ற பேத்தல் விஷயத்தை புறந்தள்ளிவிட்டு  இளையதலைமுறை கண்டிப்பாக  முன்னேறி செல்லுவார்கள்.. ஆனால் இப்போது நடக்கும்  இந்த காலக்கட்டம் இருக்கின்றதே...நடுவில் மாட்டிக்கொண்டு தவியாய் தவிக்கின்றது இளையதலைமுறை... தானே முடிவு எடுப்பதா? அல்லது பெற்றோருடன் கலந்து பேசி முடிவு எடுப்பதா? என்று குழம்பிக்கொண்டு இருக்கின்றது... அது   புரிபட இன்னும் கொஞ்சம் வருடம் ஆகும்...

இப்போது கண்டிப்பாக வயதுக்கு வந்த ஆண் பெண் பிள்ளைகள் வைத்து இருக்கும் அத்தனை பெற்றோரும் , டீன் ஏஜ் பிள்ளைகளும் இந்த படத்தை அவசியம் பார்க்கவேண்டும்... வாழ்வியல் பிரச்சனையை சொல்லிக்கொடுக்கும் படம்  என்பதால்.. அதே போல படம் முடியும் போது நீரோத் உபயோகியுங்கள் என்று ஒரு சிலைட் போட்டு இருக்கலாம்...  கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்.


================



thanks to 

JACKIE SEKAR.

check original version 

Thursday, 15 August 2013

HAPPY INDEPENDENCE DAY

அனைவர்க்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்




ஆமா போங்க..என்ன சுதந்திரம் ஒரு படம் கூட இந்த சுதந்திர நாட்டுல ரிலீஸ் பண்ண முடியல 

VIJAY RASIGAN

உன்ன இவ்ளோ புடிக்கும்னு எனக்கு இவ்ளோ நாளா தெரில யா 
நீ ஏன் யா இவ்ளோ கவலை பட்ற?? நாங்க இருக்கோம் உனக்கு! 
உனக்கு ஒண்ணுனா நாங்க சும்மா விட்ருவோமா?
படம் வரலனா? அவ்ளோதானா? வெறும் மூணு மணி நேர படத்துக்கு நாங்க உன் ரசிகன் இல்ல யா  நீ எங்க வீட்ல ஒருத்தன் மாதிரி!!

படம் வந்தாலும் வரலைனாலும் நீ தான் யா எங்க தலைவன் ! நீ ஒருத்தன் தான் ! எத்தன பேர் வந்தாலும்.. எவ்ளோ எதிர்ப்பு வந்தாலும்! நீ எங்க மனசுல ராஜா மாதிரி கால் மேல கால் போட்டு உக்காந்திருப்ப யா!

உன் சிரிப்புக்கு இந்த ரசிகர் பட்டாளமே அடிமை  அந்த சிரிப்பு இல்லாம உன்ன பாக்க முடில 
உன்ன எதிர்க்கறவன் நேரம் ரொம்ப நாள் நல்லா இருக்காது.. அது மட்டும் சத்தியம்.. இது பல விஷயத்துல .. பல பேருக்கு நடந்திருக்கு..

ஆனா ஒண்ணு நீ இவ்ளோ கஷ்ட படும்போது.. அத கேலி செஞ்சி சிரிக்கற எல்லா எச்சக்கல..ஈன பிரவிங்களுக்கும் இருக்கு.. த்தா..
எதிரிய இருந்தாலும்..ஒருத்தன் கஷ்டத்துல சந்தோஷ படுற உங்க பொறப்பு எப்டின்னு நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேணாம்!!

தலைவா.. நீ எப்போ வேணா வா.. உனக்காக "பூ..பட்டாசோட" காத்துட்டிருக்கோம்...!!!
-என்றும் தளபதி ரசிகன்!!




THALIVA...issue

Wednesday, 14 August 2013

Blast on submarine that was refitted in Russia

Part of the refit involved installation of equipment for Klub-S (3M54E1 anti-ship and 3M14E land attack) cruise missiles and over 10 Indian and foreign-made systems

Mumbai: INS Sindhurakshak, which was rocked by a massive explosion accompanied by a fire here Wednesday, is an Indian Navy diesel-electric submarine that has been handed back to India following a major refit at Russia's Zvezdochka shipyard. A huge explosion accompanied by a fire rocked the submarine docked in the high security naval dockyard early Wednesday, officials said.

The contract for the refit and modernisation of the INS Sindhurakshak (S63), a Project 877 EKM (NATO Kilo-class) submarine was signed in June 2010, RIA Novosti news agency had earlier reported. Part of the refit involved installation of equipment for Klub-S (3M54E1 anti-ship and 3M14E land attack) cruise missiles and over 10 Indian and foreign-made systems, including the Ushus hydro-acoustic (sonar) system and CSS-MK-2 radio communications system.
In addition, the boat's cooling system was modified, a "Porpoise" radio-locater fitted and other work carried out "increasing the boat's military capacity and safety". The Sindhurakshak was laid down in one of Russia's oldest shipyards, the Admiralty Wherf yard in St. Petersburg in 1995. It was launched in 1997 and delivered in December that year.
The boat displaces 2,300 tonnes, carries 52 crew members, has a top speed of 19 knots (35 km per hour) and diving depth of 300 metres. Zvezdochka, which specialises in repair and refit of nuclear-powered boats, has already refitted four of India's diesel-electric fleet — Sindhuvir (S58), Sinduratna (S59), Sindhugosh (S55) and Sindhudvhaj (S56).

THALAIVA- Box Office except TAMILNADU


Though Thalaivaa didn't make it in time to theaters in Tamil Nadu, some of the other prominent markets such as Kerala, Karnataka, Andhra and the overseas circuits saw the movie’s release and the opening has been good all over.

Kerala – From a total of 131 screens, the opening has been excellent and the first weekend gross is expected to be above 3 crores. The first day gross of 1.12 crores perfectly set the pace for constant improvements over the weekend. It must be noted that lot of audiences from Tamil Nadu are frequenting theaters in the TN – Kerala border to catch a glimpse of Thalaivaa. The Eid festival period has given a huge boost to the Kerala box-office and Thalaivaa stands on top. Distributors are confident that the movie’s overall collections will end up being as big as Thuppaki and Pokkiri in Kerala.

Andhra Pradesh – The Telugu dubbed version, Anna, after a terrific day one opening share of 1 crore, settled at around 2 to 2.25 crores for the overall weekend share. Anna opened in around 275 screens, making it Vijay’s biggest release in Andhra. The Tamil version of the movie is being screened in 3 properties in Hyderabad City. The overall feedback from audiences seem to be that the second half is a little lengthy but the fact that the movie didn’t have competition from any Telugu releases in its opening weekend helped its cause.

Karnataka – Bangalore City has seen an extraordinary opening for Thalaivaa with occupancies ranging in the 85 to 90% range. After the first day, 4 extra screens were added and trade pundits opine that the opening is better than the other recent big release Singam 2. A lot of fans had traveled from Tamil Nadu to see the movie, thereby adding to the craze in Bangalore City. But it must be seen if the weekdays can sustain as well as Singam 2 did.

UK – From the paid previews on Thursday till Saturday, Thalaivaa’s gross in the UK is 78 lakhs approximate from 34 locations and it is seen as a very impressive opening. Vijay’s films generally embark on a great start in the UK, and Thalaivaa is no exception.

USA – At the end of the first weekend, the US gross of Thalaivaa from 44 reported locations is 212,000 USD (1.29 crores). A record total of 70 locations are screening Thalaivaa and the total gross for the first weekend is expected to be in the 250,000 USD range. But there was a drop from Day 2 on wards and overall the film is expected to break-even in the US.

Malaysia, Singapore and SRI LANKA have opened well as expected,

It must be noted that Chennai Express is on a record breaking spree in most of the overseas markets and the other Southern Indian states such as Karnataka and Andhra. This has impacted the collections of Thalaivaa, opine trade pundits.

Now all eyes are on Thalaivaa’s release date in Tamil Nadu and how it will open here.
because Vijay enjoys a huge fan base in these countries.  
THANKS TO 
BEHIND WOODS

THALIVA- Movie Review

தலைவா - திரை விமர்சனம்



விஜய் + விஜய் கூட்டணியில்  ரமலான் விருந்தாக  வெளிவந்துள்ளது 'தலைவா'. விஜய்யும் சந்தானமும் ஆஸ்திரேலியாவில் மினரல் வாட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார்கள், பிழைப்பிற்கு இதுவென்றால் விஜய்யின் பொழுதுபோக்கு ஆடுவது. நடனப்போட்டியில் விஜய்யின் 'தமிழ்ப்பசங்க' குழு பங்கு பெறத் தேர்வாகிறது, இந்த அணியில் அமலா பாலும் இணைந்து நடனப் போட்டியில் வெல்கிறார்கள். 

இவர்கள் இருவரும் காதலிக்கத் தொடங்க,விஜய்யின் தந்தை சத்யராஜின் சம்மதம் பெற விஜய்யுடன் அமலா பாலும் அவர் தந்தை சுரேஷ்ஷும் இந்தியாவிற்கு வருகிறார்கள். மறைந்து வாழும் தந்தை சத்யராஜ் தவறான தொழில் செய்கிறாரோ என்று வருந்தும் விஜய்க்கு ஏன்? எதற்கு என்று பின்னணி, முன்னணி விளக்கப்பட ஒரு கட்டத்தில் விஜய்யே அம்மக்களுக்குத் தலைவனாகும் நிலைமை உருவாகிறது.  எதிரிகளை எப்படி பழி வாங்குகிறார், மாஹிம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறார் என்பது மிச்சம் மீதி சுவாரஸ்யங்கள்.


முற்பாதி நேரம் போவதே தெரியவில்லை, பிற்பாதியின் நீளத்தைக் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தேவர் மகன், நாயகன் படச்சாயல்கள் இருந்தாலும் விஜய்யை இவ்வகைப் பாத்திரத்தில் பார்ப்பது நமக்கெல்லாம் புதிது. விஜய் ஆடல், காதல், நகைச்சுவை, சண்டைக்காட்சிகள் என்று அனைத்திலும் பின்னி எடுக்கிறார், வயது குறைந்து கொண்டே வருகிறதா?  மனிதர் கலக்கியிருக்கிறார். முதல் பாதி காதல், கலாட்டா எனக் குதூகலமாகப் போகிறது.  முழு நேர நகைச்சுவை அல்லது காதல் படத்தில் விஜய் நடித்தால் நன்றாக இருக்குமே என்று ரசிகர்களை ஏங்க வைக்கிறார். அமலா பாலிற்கு மற்றப்பட நாயகிகளைப் போல கவர்ச்சிக்காக மட்டும் வந்து செல்வது போலல்லாமல் நடிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 

நாயகியை ஒப்பந்தம் செய்வதற்கு முன் சந்தானத்திடம் பேசி ஒப்பந்தம் செய்து விடுவார்களோ? என்னமோ, எனக்கு டான்ஸ் பிடிக்காது, ஏன்னா எனக்கு வராது, என்பது போன்ற சந்தானத்தின் ஒரு வரி நகைச்சுவை வசனங்களும் அலப்பறைகளும் பேஷ் பேஷ்.. ரசிக்கும்படி உள்ளன. சத்யராஜ் அளவாகவும் நிறைவாகவும் நடித்திருக்கிறார்.  இயக்குனர் விஜய் தன் அண்ணன் உதயாவிற்கும்(வீடியோ எடுப்பவர்) ஒரு பாத்திரத்தை வழங்கியிருக்கிறார்.நாசர், உதயா, ரேகா கெளரவத்தோற்றங்களில் வந்து செல்கிறார்கள். "தப்பைச் செஞ்சாத் தான் தப்பு, தப்பைத் தட்டிக் கேட்கிறது தப்பே இல்ல" போன்ற சில உரையாடல்கள் அருமை. 




பாராட்டப்பட வேண்டிய மற்றொரு நாயகன் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, சிட்னியின் அழகைக் கண்முன்னே கொண்டு வருவதாகட்டும் மும்பை நகர நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகட்டும் அவரின் கேமிரா காதல் கண்கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறது. ஜி.வி. பிரகாஷின் இசையில் 'வாங்கண்ணே', 'யார் இந்த சாலையில்' என்று ஓரிரு பாடல்கள் தேறுகின்றன,  'தளபதி' பாடல் தளபதி படப்பாடல் 'தளபதி! எங்கள் தளபதி'யை நினைவுபடுத்துகிறது. இடைவேளைக்குப் பிறகு திரையரங்கில் நெளிபவர்களின் நிலையைப் பார்த்தால் அந்தோ பரிதாபம். படத்தின் நீளம் மிகப்பெரிய குறை. இழுவையைக் குறைத்துத் தொய்வைச் சரிகட்டியிருக்கலாம். 

முற்பாதி கலகலப்பு, பிற்பாதி விறுவிறுப்பு. பிற படங்களின் சாயல்கள் இல்லாமல் இரண்டாம் பாதியில் புதுமையைப் புகுத்தியிருந்தால் 'தலைவா' ஆழமாக நின்றிருப்பான், இதயங்களை வென்றிருப்பான்.  



இயக்குனரிடம் சில கேள்விகள்:


1. புத்திசாலி இளைஞனாக இருக்கும் விஜய்க்கு ஒரு தரம் கூட இந்தியா வந்து அப்பாவுடன் தங்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?

2. சத்யராஜ் மகனை வெளி நாட்டில் பொத்தி பொத்தி வளர்க்கிறார், இருந்தாலும் பிள்ளையின் உயிர்ப்பாதுகாப்பிற்காக ஏன் ஆளை நியமிக்கவில்லை? மகனே நாயகன் என்பதாலா?

3. பிற்பகுதியில் விஜய் தலைவனான பிறகு கூலிங்கிளாஸ் அணிந்தே சண்டை போடுகிறார்? இருளிலும் கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டே பேசுகிறார், நடக்கிறார்? ஏன்?

4. நாயகன் படத்தைப் பார்த்து அதே சாயலைப் படத்தில் திணிக்க முயன்றது ஏன்?

5. விஜய்யின் அரசியல் அச்சாரத்திற்கு வித்திடுவது போல சிலக் காட்சிகளைத் திணித்தது ஏன்? 

6. மும்பையில் ஒரு சிலரைத் தவிர அனைவரையும் தமிழில் பேச வைத்தும் பாட வைத்தும் காதில் பூ சுற்றியது ஏனோ?

குறைகள் இருப்பினும் 'தலைவா' விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் ரமலான் விருந்தே தான்.

Tuesday, 13 August 2013

KOCHADAYAN STORY - IMAGINATION - WRITTEN BY KARTHIK V

இந்த கதை கோச்சடையன் கதை அல்ல ..,,,


கார்த்திக் .V  அவர்களின் கற்பனை ...,,

கதை மிகவும் பிரமாதம் .....அவரின் தொடர்புகு ,,...

karthik

+91-9994730349 (Chennai). karthikitvkr@live.com

i tried to enter into film industry for more than 6 years. i know editing, screenplay writing, cinematography and direction. i tried to become film maker. if i am writing my own stories and post it in the pages like this, i will get some likes. so that it become useful for my career. so that i am writing the stories coming from my imagination. if you think i am copied the real story, just wait and watch the kochadayan movie, then you come to know





கதை நிகழும் ஆண்டு 1700ஆவது வருடம்.
கோச்சடயபுரம் மற்றும் ராணா நகரம் என்று இரு நாடுகள் .கோச்சடயபுரத்தின் ராஜா வின் பெயர் கோச்சடயான். ராணா நகரத்தின் அரசனின் பெயர் ராணா. ராணா நகர மக்கள் ராணாவின் கொடுமையால் அவதி படுகின்றனர். கோச்சடயான் ராணாவை கொன்று அந்த ராணா நகரத்தை எப்படி தன்வச படுத்தி அந்த நாடு மக்களுக்கு ஒரு நல்ல அரசை தந்தார் என்பது தான் கோச்சடயானின் கதை.
கோச்சடயபுரம் நாட்டின் ராஜாவாக ரஜினி.அவர் பெயர் தான் கோச்சடயான் . அவரது மகன் இன்னொரு ரஜினி.கடலுக்கு அடியில் 300km அளவில் ஒரு புதையல் இருப்பது கோச்சடயானுக்கும் ரானாவிற்கும் தெரியவருகிறது.இருநாட்டின் காவலாளிகளும் கடல் பக்கத்தில் காவல் காக்கின்றனர்.அதனால் அந்த புதையல் யாருக்கு கிடைக்கும் என்பதில் ஒரு பெரிய குழப்பம் வருகிறது. இரு நாட்டின் காவல்காறர்களும் நின்று கொண்டிருந்தால் அது யாருக்கும் கிடைகாது. அதனால் போர் புரிந்து வெற்றி அடையும் நாடு அந்த புதையலை எடுத்து கொள்ளலாம் என்று ராணா கூறுகிறார். போர் என்றால் பல உயிர்கள் பலி ஆகும்.அதற்கு கோச்சடயான் என்றுமே துணை போக மாட்டன் என்று ரஜினி கூறுகிறார்.ராணா கோவம் அடைவதை பார்த்த கோச்சடயான் "நீயே கடல் புகுந்து புதையலை எடுத்துகொள் என்று ராணாவிடம் கூறி கோச்சடயான் விட்டு கொடுக்கிறார் ."கோச்சடயான் பெருந்தன்மையுடன் விட்டு கொடுத்ததை கோச்சடயபுற மக்கள் தோல்வியாகவே பார்த்தனர்". வருத்தம் அடைந்தனர். ஆனால் கோச்சடயானிடம் அந்த வருத்தத்தை காட்டி கொள்ள வில்லை. இந்த செய்தி கோச்சடயாணிற்கு சென்றது. கோச்சடயான் புதையலை கைவிட்டதை ராணாவின் கூட்டம் வெற்றி பெற்றது போல் கொண்டாடினார்கள். ராணா அவனுடைய ஆட்களை அனுப்பி கடலில் இருந்து புதையலை எடுக்குமாறு கட்டளை இட்டான். ராணாவின் ஆட்கள் கடலுக்கு 300km வரை சென்று பார்த்த போது அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு புதையல் இல்லை. இந்த செய்தி ரானாவிற்கு தெரிந்தஉடன் கோபத்தில் கடலிருக்கு சென்றவர்களை கொன்று விடும் படி ராணாவின் எல்லையில் இருக்கும் கடல் காவலாளிகளுக்கு ஆணை இட்டான். ராணாவிற்கு ஒரே குழப்பம். கடலை விட்டு ஆயிரகணக்கான காவலர்களை ஏமாற்றிவிட்டு புதையல் வெளியே கொண்டுவருவதற்கு வாய்பே இல்லை. புதையல் என்ன ஆயிற்று என்று பெரும் குழப்பத்தில் இருந்தான். கோச்சடயபுற மக்களிற்கும் இது பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது.கோச்சடயானின் மகன் ரஜினி குதிரையில் அரண்மணை நோக்கி வருகிறார். அவர் குதிரையில் வருவதை பார்த்த ஊர் மக்களிற்கு புதையல் பற்றிய ரகசியம் போலவே இவ்வளவு நாள் இளவரசர் எங்கு சென்று இருந்தார் என்பதும் புரியாத புதிராகவே இருந்தது . இளவரசர்( ரஜினி) வந்து தனது தந்தை கோச்சடயானை பார்த்து வெற்றிகுறி காட்டுகிறார். "இவ்வளவு நாள் இளவரசர் எங்கு சென்று இருந்தார். இன்று வந்த உடன் வெற்றி குறி காட்டுகிறார்.என்ன அர்த்தம்" என்று அரசவையில் இருந்த மந்திரி ஒருவர் கோச்சடயானை பார்த்து கேட்கிறார்.அதற்கு இளவரசர் flashback சென்று நடந்ததை கூறுகிறார் "கடலுக்கு அடியில் 300km சென்று புதையலை பார்த்தேன். புதையலை தூக்கி கொண்டு வருவது முடியாத காரியம். அதனுடைய இடை மிகவும் அதிகம். அதனால் புதையல் இருக்கும் இடத்தை மாற்றி வைத்து விட்டு வெளியே வந்துவிட்டேன். ராணாவிடம் இருக்கும் ஓலை சுவடியில் உள்ள திசை நோக்கி சென்று பார்த்தல் அங்கு புதையல் இருக்காது. திமிங்கலம் தான் இருக்கும்" என்று இளவரசர் கூறி முடிக்கும் போது ஊர் மக்கள் அனைவரும் இளவரசர் மற்றும் கோச்சடயானின் சாணக்ய தனத்தை பார்த்து வியகின்றனர். சந்தோச படுகின்றனர். கோச்சடயானின் அரசவையில் இருக்கும் ராணாவின் கூலி ஆள் (black sheep ) ஒருவன் மூலமாக இந்த செய்தி ராணாவிற்கு செல்கிறது.ராணா கோபத்தின் உச்சகட்டத்தில் இருக்கிறான். என்னை ஏமாற்றி புதையலை ஒலித்து வைத்து விட்டன. இனி எனக்கு அந்த புதையல் கிடைக்காவிட்டாலும் பரவாஇல்லை அவனுக்கு கிடைக்க கூடாது என்பதற்காக கோச்சடயானின் மகன் இளவரசர் ஐ கொள்ள திட்டம் தீட்டுகிறான் ராணா. அறிவிக்காமல் ஒரு பெரிய போரை அந்த நாட்டிற்குள் நடத்திவிட்டால் கண்டிப்பாக அந்த நாட்டு மக்களுடன் சேர்ந்து இளவரசனையும் கொன்று விடலாம் என்று ராணா தரப்பில் யாருக்கும் தெரியாமல் அமைதியாக ஒரு திட்டத்தை தீட்டுகிறார்கள். அந்த போர் நடத்தப்படும் நாள் வருகிறது. வழக்கம் போல் கோச்சடயபுரத்தில் மக்கள் இயங்குகிறார்கள். அவர்களுக்கு இப்படி ஒரு பெரிய ஆபத்து தங்களை நோக்கி வந்து கொண்டு இருப்பது தெரியாது. ராணா நகரத்தில் அனைவரும் ஆயுதங்களுடன் தயார் ஆகிறார்கள். இரவில் சென்று வீழ்த்தினால் கோச்சடயபுரத்து மக்களால் திடீர் எதிர் கொள்ள முடியாது என்று அவர்கள் அனிவரும் நினைத்து தீபந்தத்தை எடுத்துகொண்டு போருக்கு புறபடுகின்றனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. தீபந்தங்கள் அணைய தொடங்கி இருள் சூழ்ந்து விடுகிறது. ஒருவருடைய முகத்தை கூட இன்னொருவரால் பார்க்க முடிய வில்லை. அந்த அளவிருக்கு இருள் சூழ்ந்து விடுகின்றது.தீபந்தம் எரிய எந்த வழியும் இல்லாமல் ராணா நகர காவலாளிகள் மற்றும் ராணா அனைவரும் செய்வதறியாது நிற்கின்றனர். மழை நின்றுவிடுகின்றது. அப்போது தூரத்தில் ஒரு ஒளி தெரிகின்றது. ஒரு பெரிய கூட்டம் ராணாவின் கூட்டத்தை நோக்கி தீபந்தத்துடன் வருகின்றது. கிட்ட வந்துடன் தான் அது கோச்சடயபுரத்து மக்களுடன் இளவரசர் ரஜினி வருகிறார் எனபது ராணா கூடத்திற்கு தெரிகிறது. கூட்டம் அருகில் வந்த உடன் "என்னை கொல்வதற்கு இன்று உனக்கு வழி இல்லை. அதனால் இன்று போய் நாளை வா" என்று இளவரசர் ரஜினி ராணா நகர கூலி ஆட்களுக்கு அறிவுறை கூறியதோடு மட்டும் இல்லாமல். ராணா நகர கூலி ஆட்கள் ராணாநகரத்திற்கு செல்வதற்கு தீபந்தத்தை உதவிக்கு கொடுத்து அனுப்பி வைக்கிறார். நீ(இளவரசர் ரஜினி) கொடுத்த உயிர் பிச்சையில் வாழ என் கூலி ஆட்கள் ஒன்னும் பிச்சை காரர்கள் இல்லை என்று இளவரசர் செய்த உதவியை புரிந்துகொள்ளாமல் ராணா தன்னுடைய கூலி ஆட்களை கொன்று விட்டு ஊர் திரும்புகிறான். ராணா நகரத்து மக்கள் எல்லாரும் "ரஜினியை கொல்வது இயற்கைக்கே பிடிக்கவில்லை. அதனால் தான் மழை பெய்து இருக்கிறது நேற்று என்று கூற ஆரம்பித்தனர். முதல் முயற்சி தோல்வி அடைந்த வருத்தத்தில் இருக்கிறான் ராணா.. இளவரசர் ஓலை சுவடி ஒன்றில் புதையலின் புதிய இடத்தை விவரிகறார். அந்த ஓலை சுவடியில் சில அமிலங்கள் தடவி வைத்திருக்கிறார். அதை யார் எடுத்து கொண்டு சென்றாலும் , அந்த அமிலம் காற்றுடன் கலந்து ஒரு விதமான வாசனையை கொடுக்கும். அந்த வாசனை யார் அந்த சுவடியை தொட்டர்களோ அவர்களிடத்திலும் இருக்கும். அது மட்டும் இல்லாமல் அரண்மணை புறாவிற்கு அந்த சுவடி எங்கு இருந்தாலும் இருக்கும் இடத்தை மோப்ப சக்தி வைத்து கண்டுபிடித்து விடும். அந்த அமிலத்தையும் சுவடி வாசனையும் காற்றுடன் கலந்த உடன் கிடைக்கும் வாசனையும் கண்டுபிடிக்கும் அளவிற்கு அந்த புறாவிற்கு பயிற்சி அளிகபட்டு இருக்கிறது. இது தெரியாமல் அரசவியில் உள்ள அந்த துரோகி(blacksheep ) அதை திருடி கொண்டு ராணாவிடம் கொடுத்துவிடுகிறான் . கொடுத்துவிட்டு ஊர் திரும்புகிறான். ஊர் மக்கள் வழக்கமான வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . திடீர் என்று அந்த புறா அந்த துரோகியிடம் செல்கிறது. அவனும் புறா நம்மிடத்தில் பாசமாக வருவதாக நினைத்துகொண்டு கொஞ்சுகிறான். கோச்சடயான் மற்றும் இளவரசர் மற்றும் ஒரு சிலர்க்கு மட்டுமே தெரியும் புறா பற்றிய உண்மைகள்.
அவர்கள் அனைவரும் கோபத்துடன் துரோகியின் பக்கம் பார்கின்றனர். அவன் விளையாட்டாக "நான் இந்த புறாவை என் தலையில் வைத்து கொள்கிறேன்..அங்கிருந்து நீங்கள் அம்பு எறியுங்கள் என்று கோச்சடாயனிடம் கூறுகிறான்". கோச்சடயான் அம்பு எறிகிறார். அவனது இடது கண்ணை அந்த அம்பு துளைத்து கொண்டு போய் வெளியே விழுகிறது. வலியால் துடித்து இறந்தான் துரோகி. அவன் இறந்த பிறகு தான் அணைத்து கோச்சடயபுரத்து மக்களிற்கும் அவன் துரோகி என்பது தெரியவந்தது . வெளியே விழுந்த இடது கண்ணை எடுத்துகொண்டு ராணா நகரம் செல்கிறார் இளவரசர் ரஜினி தனியாக. "உன் கூட்டாளியின் கண் மட்டும் தான் மிச்சம் இருக்கிறது. இந்த கண்ணில் தோல்வியை தவிர எதுவும் தெரியவில்லை. உன் கூட்டத்தில் என்னுடைய ஆள் ஒருவன் இருக்கிறான். முடிந்தால் கண்டுபிடித்துகொள்" என்று கூறிவிட்டு கம்பிரதுடன் கோச்சடயபுரம் திரும்புகிறார் .
INTERVAL
ராணா அவனுடைய கூட்டாளியில் யார் அந்த கோச்சடயபுரத்து ஆள் என்று தெரியாமல் திணறுகிறான். பயபடுகிறான். ஊர் மக்கள் யாரை கண்டாலும் சந்தேக படுகிறான். சந்தேகத்தால் பல பேரை கொன்றுவிடுகிறான்.
கோச்சடயபுரத்தில் இருந்து இளவரசர் ஓலை சுவடி அனுபுரிகிறார். அதில், "எந்த கோச்சடயபுரத்து ஆளும் உன்னுடைய கூட்டத்தில் இல்லை. உன்னுடைய பயத்தின் உச்சம் வானம் என்று தெரிந்துகொண்டேன் ராணா" என்று அதில் எழுதி இருந்தது.
ராணா வெறுப்பு அடைந்ததால் இரவோடு இரவாக கோச்சடயபுரத்து கடல் காவலாளிகளை கொன்றுவிடுகிறான்.
கோச்சடயபுரத்து மக்களும் கோச்சடயான் முன்பு வந்து நின்று "இது தொடர்ந்து கொண்டே இருந்தால் நம்முடைய ஆட்கள் அழிந்து போகிறார்கள்.
இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள். "
"போருக்கு தயார். கோச்சடயபுரம் உங்களை உங்களுடைய அழிவுக்காக வரவேற்கிறது" என்று ராணா நகரத்திற்கு ஓலை அனுப்பு என்று இளவரசனிற்கு ஆணை இடுகிறார் கோச்சடயான்.
முதல் முறை கடலிருக்கு சென்று புதையலை இடம் மாற்றி வைக்கும் போது புதையலின் வாசனையை அறிந்து கொண்டு வந்தார் இளவரசர் ரஜினி
இப்போது புதையல் கடலில் எங்கு வேண்டும் ஆனாலும் இருக்கலாம்.
அதை கண்டுபுடிக்க அந்த வாசனையை மையபடுத்தி ஒரு திரவியம் கண்டுபுடிக்கரர் இளவரசர்.
கோச்சடயபுரத்தில் அரண்மனையில் பூந்தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு வாசனை திரவியங்கள் எடுக்கப்படும் பூக்கள் இருக்கின்றன.அதே வாசனை உள்ள ஒரு திரவியம்(perfume) புதிதாக கண்டுபிடித்து, கடலில் உள்ள உப்புடன் சேர்த்து ஒரு பாம்பிற்கு இந்த perfume வாசனையை பழக்கி வைகிறார்கள். இந்த வாசனையை பாம்பு கண்டுபிடித்தால், அதை நோக்கி செல்லும்.அப்போது புதையல் இருக்கும் இடத்தை எளிதில் கண்டுபிடித்து விடலாம் .
போருக்கு நாள் நெருங்கி கொண்டே போகிறது. அந்த நேரத்தில் மற்றும் ஒரு ஓலை கோச்சடயபுரத்தில் இருந்து ராணா நகரத்திற்கு "பூமியில் போர் வேண்டாம். கடலுக்கு அடியில் வைதுகொல்ள்ளலாம். என் பூமியில் என் உடன்பிறவா சகோதரர்களுடைய ரத்தம் சிறிதும் சிந்த கூடாது"
அதற்கு பதில் ஓலை அனுப்புகிறான் ராணா "உன் ஆட்களுடைய ரத்தம் பூமியில் சிந்தும் என்று உனக்கு உள்ள பயம் தான் என்னுடைய வெற்றி"
அதற்கு பதில் ஓலை அனுப்புகிறார் கோச்சடயான் "நான் உடன் பிறவா சகோதரர்கள் என்று சொன்னது ராணா நகரத்து ஆட்களை தான்.கோச்சடயபுரத்து மக்களை அல்ல. கோச்சடயபுரத்து மக்கள் எனது ரத்தம்.என் உடன்பிறப்புக்கள் ."
போர் வந்தது கடலுக்கு அடியில். பாம்பு புதையல் இருக்கும் திசையில் போகிறது. அதை பின் தொடர்ந்து சென்று புதையலை வெல்கிறார் இளவரசர்.
கோச்சடயான் under water சண்டை காட்சியில் பட்டையைகிளப்பி . பல வில்லன், சுறா உடன் சண்டை போட்டு ராணாநகரத்தை வெல்கிறார்.
(FIGHT SEQUENCES CANT BE EXPLAINED HERE . IT SHOULD BE VISUALLY SHOWN )
கோச்சடயபுரத்தை ராணா நகரத்துடன் இணைத்து என்னன்ன நல்லது செய்கிறார் என்பதை நாம் "RAANA " படத்தில் காண்போம்.
THE FILM ENDS !!!

THIS STORY @COPYRIGHTS TO  ( MR .KARTHIK .V )

சிங்கம் 2



நம்மூர்ல எலெக்சன் ப்ரச்சார கூட்டம் நடக்குறப்போ,ஒரு பெரிய ஸ்பீக்கர நம்ம வீட்டு வாசல்ல கட்டி தலீவரு ஆத்தோ ஆத்துன்னு ஆத்தி அறுத்துகிட்டு இருக்கும் போது இருக்கும் போது திடீர்னு கரண்டு போனா நமக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கும்அதே மாதிரி ஃபீலிங்தான் இந்த படம் முடியும்போது நமக்கு. வக்காளி என்ன வாயிடா அது என்ன வாயிபடம்ஆரம்பிக்கும் போது வாய தொறந்தவன் எண்டு கார்டு போடுற வரைக்கும் மூடவே இல்லை. மழை காலத்துல தவளை கத்துற மாதிரி காய் மூய் காய் மூய்ன்னு.. கருமம்.எதோ நமக்கு வசனம் நல்லா பேச வருதுங்கறதால வண்டி வண்டியாவா பேசுறது?

இந்த படம் ரிலீஸான அன்னிக்கு ஒருத்தர் விமர்சனம் பாத்தேன். நான் "C" க்ளாஸ் ரசிகனா இந்த படத்த பாக்கனும்னு முடிவு பண்ணி உக்காந்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததுன்னு. அதாவது நேரடியா அவருக்கு புடிச்சிருக்குன்னு சொன்னா யாராவது காலாய்சிருவாங்களாம். ஏன்பா.. "C" க்ளாஸ் ரசிகன்னா யாருஎத எடுத்தாலும் பாக்குறவனாக்ளாஸ் ரசிகர்கள் (என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள்) காமெடிக்கு வாயத்தொரக்காம சிரிச்சான்னா அதேகாமெடிக்கு  சத்தம்போட்டு சிரிக்கிறவன் சி க்ளாஸ் ரசிகன். நல்ல சீன் ஒண்ணு வந்தா கை தட்டி ரசிக்கிறவன் க்ளாஸ் ரசிகன்னா அதுக்கே விசிலடிக்கிறவன் க்ளாஸ் ரசிகன். இவ்வளவுதான் ரெண்டுக்கும் உள்ள வித்யாசமே தவற கண்டமேனிக்கு எவன் என்ன எடுத்தாலும் செண்டர்ல பாப்பாய்ங்கன்னு அர்த்தம் கெடையாது.

சிங்கம் படம் எனக்கு ரொம்ப புடிச்ச படங்கள்ல ஒண்ணு. நா அதிக முறை பாத்த ஹரி மற்றும் சூர்யா படமும் சிங்கம் தான். பொதுவா ஹரி படங்கள்ல வித்யாசமா நாம எதாவது எதிர்பாத்து போனா நம்மள விட கேனையன் வேற யாரும் இருக்க முடியாது.மணல் மற்றும் மணல் சார்ந்த பகுதிகளிலேயே அதிகம் படம் எடுப்பாரு. தூத்துக்குடி திருநெல்வேலி காரைக்குடி போன்ற லொக்கேஷன்களை மட்டுமே நம்புவாரு. துப்பாக்கிகள விட அருவா மேல் அதிக நம்பிக்கை வைத்து படம் எடுக்குறவரு. இவர் எடுத்த எல்லா படங்களுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். இருந்தாலும் போர் அடிக்காது. இவரு விக்ரம வச்சி எடுத்த "அருள்"பரத்த வச்சி எடுத்த "சேவல்" படங்கள தவற மத்த எல்லா படமுமே நல்லாதான் இருக்கும். அதுவும்  திரும்ப சூர்யாவோட கூட்டணி.. படம் கண்டிப்பா நல்லா இருக்கும்ங்கற நம்பிக்கைல போனேன். முதல் இரண்டு நாள்ல வந்த விமர்சனங்கள் எல்லாமே "சூப்பரா இருக்கு" "செமயா இருக்கு" "நல்லாருக்கு" இது மட்டும் தான்.

ஆனா சத்தியமா சிங்கம் முதல் பகுதியோட தரத்துல கால் பங்கு கூட இந்த இரண்டாம் பாகம் இல்லை. முதல் பகுதில ரிசைன் பண்ணிட்டு ஊருக்கு மளிகை கடை வைக்க போன நம்ம  தொரை சிங்கம். கடலோரத்துல நடக்குற  கடத்தல்கள கவனிக்கிறதுக்காக தூத்துகுடில ஒரு பள்ளி கூடத்துல NCC மாஸ்டரா வேலை பாக்குறாரு. படத்தோட முதல் காட்சிலயே ஹரி இப்படி ஒரு மாற்றத்த பண்ணிருப்பாருன்னு நா கொஞ்சம் கூட எதிர்பாக்கல. வழக்கமா அவர் படங்கள்ல ஃபைட்டுக்கு அப்புறம் தான் பாட்டு வரு. ஆனா இந்த படத்துல பாட்டுக்கு அப்புறம் ஃபைட்டு வருது. அப்பவே முடிவு தெரிஞ்சிது இது ஒரு வித்யாசமான படம்னு.

அந்த ஸ்கூல்ல படிக்கிற புள்ளைதான் நம்ம ஹன்சிகா. அங்க பாருங்க ஹன்சிகா ஸ்கூல்ல படிக்கிதுன்னோனயே ஒருத்தருக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சி. எனக்கும் அதே பீலிங்குதான். சூர்யாவுக்கு பெரிம்மா மாதிரி இருக்க ஹன்சிகா பள்ளி கூடத்துல பக்கிதுபா. அய்யா படத்துல நயன் தாராதாமிரபரணி படத்துல பானு போட்டுருந்த அதே சுடிதார் தான் இந்த புள்ளைக்கு காஸ்டியூமு. கலரு மட்டும் கொஞ்சம் வேற. முதல் காட்சில ஹன்சிகா ஸ்கூல்ல கொஸ்டின் பேப்பர திருடுறத அங்க  ஒட்டியிருந்த காண்டாக்ட் லென்ச வச்சி NCC மாஸ்டரு பல கணக்கு போட்டு கண்டுபுடிக்கிறாரு. யப்பா டேய்..டேய் யாப்பா.. ஆரம்பிச்சிட்டியாடா உன் வேலைய.

ஹரிக்கு காமெடிங்குற ஒரு விஷயம் சுட்டுப்போட்டாலும் வராது போல. ஸ்கூல்ல வேலைபாக்குறவரு சந்தானம்.  இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு காமெடி சீனுக்கு கூட சிரிப்பு வராத மாதிரி ஒரு செம காமெடி ட்ராக் பண்ணிருக்கரு பாருங்க செம. பாட்டு முடிஞ்சிது ஃபைட்டு முடிஞ்சிது. சந்தானத்தோட காமெடியும் முடிஞ்சிதா. அப்புறம் என்ன திரும்ப ஃபைட்டு வரணும்ல. வாலண்டியரா சம்பந்தமே இல்லாம ஒருத்தன் பள்ளி கூடத்துல தேசிய கீதம் பாடும் போது வந்து வம்பிழுக்க,இப்பிடி ஒரு சிட்சுவேசனதான தொரைசிங்கமும் எதிர்பாத்தாரு தொறந்துருவான் வாய... தேசிய கீதம்னா என்னனு தெரியுமாடா கொடின்னா என்னனு தெரியுமாடான்னு ஒரு ரெண்டு நிமிஷம் வாய மூடாமா டயாலாக்க ஒப்பிச்சிட்டு பின்னி பெடலெடுக்குறாரு.  இத பாத்ததும் நம்ம ஹன்சிகாவுக்கு லவ்வு லவ்வுதான் கவ்வு கவ்வுதான். அப்புறம் என்ன போடுங்கடா பாட்ட.

படத்துக்கு எந்த மொழி வில்லன போடுறதுன்னு ஒரே கன்பீசன் போல.  தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய அனைத்து மொழிகள்லருந்தும் ஒவ்வொரு வில்லன கூட்டிவந்துருக்காய்ங்க. வக்காளி ஒரு படத்துக்கு எத்தனை வில்லண்டா. இது பத்தாதுன்னு ஒரு சவுத் ஆப்ரிக்கா வில்லன் வேற. பன்னி பத்து குட்டி போடும். ஆனா யானை ஒரே குட்டி தான் போடும். ஆனா பன்னிகுட்டி யானை குட்டிக்கு ஈடாகாதுங்கற மாதிரி (இதுவும் ஹரி படம் தான்) எத்தனை வில்லன் இருந்தா என்ன?  ஒரு ப்ரகாஷ்ராஜ் குடுத்த impact ல  கால் பங்கு கூட  இவிங்களால குடுக்க முடியல.  "ஆவடில துப்புனா அம்பத்தூர் நனையும்... தாம்பரத்துல தட்டுனா பாரிஸ் எகுரும்...இது மயில் வாகனம் கோட்டைடீ"ன்னு ப்ரகாஷ் ராஜ் கர்ஜிக்கும் போது யாப்பா... எப்புடி  இருக்கும். ஆனா இங்க அத்தனையும் டம்மி பீசு. சூர்யா தான் ஓவரா கத்துறான்னா இந்த பாஸ் என்கிற பாஸ்கரன்ல வர்ற ஒனிடா தலையன் அதுக்கு மேல. என்ன பேசுறான்னே தெரியாத மாதிரி ரகுமான். டம்மி பீஸா நம்ம வாஸிம் கான்.

முதல் பாதி முழுசுமே செம இழுவை. முதல் பகுதிய ரிலேட் பண்றமாதிரி வர்ற நாசர் அனுஷ்கா காட்சிங்கராதாரவி சுமித்ரா காட்சிங்க எல்லாமே எதோ நேரத்த கடத்தவே யூஸ் ஆகுது.படத்துல ரொம்ப பாவப்பட்ட ஜீவன் அனுஷ்காதான். மொத்தாமே ரெண்டு பாட்டுக்கு மட்டும் தான்யா வருது. படம் எதோ ஒரு மாதிரியா போயிட்டு இருக்கதிடீர்னு ஒரு புள்ளைய ஒரு கலவரத்துல ஒரு புள்ளைய அந்த ஒனிடா மண்டையன் தூக்கிட்டுறான். 

அவ்ளோதான் துரைசிங்கம் போலீஸா அவதாரம் எடுத்து அந்த புள்ளைய கண்டுபுடிச்சி குடுக்குறாரு. செம பர பரசீன்... அந்த புள்ளைய கண்டுபுடிச்சி அந்த ஒனிடா மண்டையன அடிச்சி தூக்கிட்டு வர்ற சீனெல்லாம் செம கெத்து.  அதுலருந்து இண்டர்லவல் வர்ற வரை ஒரு கால் மணி நேரம் படம் நல்லா தான் போச்சு. ஆனா இண்டர்வல் காட்சி அப்புடியே சிங்கம் 1ல ப்ரகாஷ்ராஜ் நல்லூர்ல மாட்டிக்கிற அதே சீன்.

அப்புறம் செகண்ட் ஆஃப்ல சூர்யா கையில எவன் எவன்லாம் மாட்டுறானோ அவனயெல்லாம் பொளேர் பொளேர்னு அடிச்சிகிட்டே இருக்காரு. கதை திரைக்கதைய வச்சி படம் ஓட்டி நான் பாத்துருக்கேன். ஆனா ஃபைட்ட வச்சே படம் ஓட்டுறத நா இங்கதான் பாக்குறேன். படத்துல  மொத்தம் ஒரு இருபத்தஞ்சி முப்பது ஃபைட்டு இருக்கும். இரண்டாவது பாதில வர்ற காட்சிகள் அத்தனையுமே சிங்கம் முதல் பகுதில வந்த காட்சிகளை கேரக்டருங்கள மட்டும் மாத்தி திரும்ப எடுத்த மாதிரி இருந்துச்சி. 

உதாரணமா நிழல்கள்ரவிகிட்ட ஒரு செமயான வசனம் பேசிட்டு உடனே ப்ரகாஷ்ரஜ் வீட்டுக்கு போயி "ஓங்கி அடிச்சா ஓண்ணரை டன் வெயிட்டு" டயலாக்க பேசுவாரு. அதே மாதிரி இங்க இன்னொரு மேலதிகாரிய புடிச்சி காய் மூய்னு திட்டிட்டு  நேரா வாசிம்கான பாக்க போயி "ஊரு விட்டு ஊரு நாடு விட்டு நாடு காடு விட்டு காடு"ன்னு வசனம் பேசுவாரு.

செகண்ட் ஹாஃப்ல படம் திக்கு தெரியாம எங்க எங்கயோ ஒடுது. அதுவும் ரொம்ப நேரம்.ஸ்கார்ப்பியோபொலேரோன்னு காருங்க போறத வீடியோ எடுத்து அத fast farward பண்ணிவிட்டுருக்காங்க. படம் ஸ்பீடா போகுதாம். எல்லா ஹரி படத்துலயும் உள்ள அருவை இது.  கார் போறத ஸ்பீடா காட்டுறதும்எப்போ பாத்தாலும் செல் ஃபோன்ல பேசுறமாதிரியே காட்சிங்க வைக்கிறதும். ஃபோன் பேசுற மாதிரி சீன் இல்லாம இவரால படமே எடுக்க முடியாது போல.

ரவுடிங்கள கும்பலா கூட்டிட்டு வந்து ஒரு ஏரியாவுக்குள்ள விட்டு "உங்களுக்கெல்லாம் ஜாலியன் வாலாபாக் படுகொலை எப்புடி நடந்துச்சின்னு காட்டுறேன்னு போட்டு நாயடி அடிக்கிறாய்ங்க. அதுக்கும் மேல ஒரு சீன்ல அருவாலால சண்டை போடனும்ங்கறதுக்காவே சூர்யா துப்பாக்கிய ஒடைச்சி சர்வீஸுக்கு குடுக்குறாரு. என்னங்கடா டேய்.

படத்துல சந்தானம்விவேக் பண்ணாத காமெடிய நம்ம விஜயகுமார் பண்ணிருக்காரு. அவரு ஹோம் மினிஸ்டரு. அவரோட வேலை என்னனா நம்ம துரைசிங்கம் என்ன சொல்ராரோ அதுக்கு "சரியா சொன்னீங்க துரை சிங்கம்" "நீங்க இப்பவே சார்ஜ் எடுத்துக்குங்க துரைசிங்கம்" "அதே தான் துரை சிங்கம்" "ஆமா துரைசிங்கம்" "அப்புடி போடுங்க துரை சிங்கம்னு" சூர்யாவுக்கு ஆமாஞ்சாமி போடுறவேலை தான்.விஜயகுமார்கிட்ட ஆப்ரேஷன் "D" ஆரம்பிக்கனும்னு மூச்சு விடாம சூர்யா பத்து ரூல்ஸ் சொல்றது அப்புடியே தென்னவன்ல கேப்டன் எலெக்ஷன் ரூல்ஸ் சொன்ன மாதிரியே இருந்துச்சி.

லோக்கல் வில்லன்களான வாசிம்கான்ரஹ்மான் ரெண்டு பேரும் சூர்யா பேசுற டயலாக்ககேக்க முடியாம காதுல ரத்தம் வந்து அவங்களா வந்து மாட்டிக்குறாங்க. ஆனா இண்டர்நேஷனல் வில்லன் டேனி சவுத் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச்சி போயிட ஓவர் நைட்டுல நம்மாளு சவுத் ஆப்ரிக்கா கெளம்பி போயி அங்க உள்ள ஆபீசர்களுக்கெல்லாம் ப்ளான் போட்டு குடுக்குறாரு. ஓட்ணது போதும்பா ரீலு அந்து போச்சி. நடுக்கடலுக்கு போட்ட எடுத்துட்டு வில்லன தொறத்தி 'U" turn எல்லாம் போட்டு வில்லனை புடிச்சி கொண்டுகிட்டு திரும்ப தூத்துகுடிக்கு  வந்துடுறாரு.

சூர்யாவ பத்தி சொல்லியே ஆவனும். ஆளு செம ஃபிட்டா இருக்காரு.போலீஸ் ஆஃபீசர்கேரக்டர் தான். ஆன அதுக்குன்னு எப்போ பாத்தாலும் கைய பின்னாடி இழுத்து வச்சிகான்கிரீட் போட்டு விட்ட மாதிரி வெரப்பாவே இருக்காரு. ஆனாலும் இது உலக வெரப்புடா சாமி. என்னதான் டயலாக் அதிகம் பேசினாலும்இப்போ இருக்க ஹீரோக்கள்ல எவ்வளவு பெரிய டயலாக்கயும் அசால்ட்டா பேசுறதுக்கு சூர்யாவையும் கார்த்தியையும் அடிச்சிக்க முடியாது.

yo yo... this is dspeeeeee.... lets sing and dance its singam dance இந்த மாதிரி கப்பிதனமான வேலையெல்லாம் பாக்க நம்ம DSP யால மட்டுமே முடியும். நா ஏற்கனவே ஒரு பதிவுல சொன்ன மாதிரி ஹாரிஸ் ஜெயராஜ் ஒரே அஞ்சி ட்யூன எல்லா பட்த்துலயும் போடுறவரு. ஆனா DSP  ஒரே ட்யூன ஒரே படத்துல 5 விதமா போடுறவரு. வாலே வாலே பாட்டும் அச்சமில்லை அச்சமில்லை பாட்டும் ஓக்கே. மத்தபடி BGM லாம் கப்பி.


மொத்ததுல ஒரு சில நல்ல காட்சிங்கள தவற வெறும் சத்தமும் வெட்டு குத்தும் தான். சிங்கம் முதல் பகுதியுடன் இதை ஒப்பிட்டு கூட பார்க்க முடியாது. ஹரி பட விரும்பிகள் பார்க்குறதுன்னா பாருங்க. ஹரி படம் பாத்த satisfaction கொஞ்சம் கூட இருக்காது.


Thanks To

AATHIRADIKARAN